பொம்மை டாஸ்க்கால் மனமுடைந்து போன விசித்திரா.. வஞ்சம் கக்கும் புல்லி கேங்!
பொம்மை டாஸ்க்கால் மனமுடைந்து போன விசித்திராவை பார்க்கும் பொழுது கவலையாக இருக்கின்றது.
பிக்பாஸ் 7
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து விட்ட காரணத்தினால் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து குறைவான வாக்குக்களை பெற்று ஜோவிகா வெளியேறியுள்ளார்.
புல்லி கேங்கிடம் சிக்கிய விசித்திரா
இன்றைய தினம் போட்டியாளர்களுக்கு பொம்மை சோன் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் விளையாடிய போது மாயா- விஷ்ணு- பூர்ணிமா ஆகிய மூவரும் பிரச்சினையை ஆரம்பித்துள்ளார்.
ஆனால் அர்ச்சனா இந்த டாஸ்க்கில் மற்ற போட்டியாளர்களை “வெச்சி செய்தேன்..” ஓபனாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இது ஒரு புறம் இருக்கையில் விசித்திரா இங்கிருந்து செல்லப்போவதாக அழுது கொண்டு படுக்கையில் அமிர்ந்திருக்கிறார்.
இந்த காட்சியை பார்க்கும் பொழுது சற்று கவலையாக இருக்கின்றது. அத்துடன் புல்லிங் கேங்கில் அடுத்து யார் வெளியேறுவார் என பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |