புயல் என்றதும் சென்னையை விட்டு ஓடிய பிரபலம்! போஸ்ட் போட்டு சிக்கினாரா ரம்யா?
விஜே ரம்யாவின் இன்ஸ்டாகிராமில் பதிவு சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விஜே ரம்யா
சின்னத்திரை தொகுப்பாளர்களுக்கு பிரபலமானவர் தான் தொகுப்பாளினி ரம்யா.
இவர் பெப்சி உமா, டிடி, சிவகார்த்திகேயன் என அந்தப் பட்டியல் இவரும் ஒருவராக பார்க்கப்படுகிறார்.
தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பிறகு பல மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தஞ்சாவூரில் பிறந்து மாடலிங்குக்குள் வந்து தொகுப்பாளினியானார்.
இதனை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் வனமகன், மாஸ்டர், சங்கத்தலைவன் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் பொழுது திருமணம் செய்து கொண்டார்.
திடீரென ஒரு நாள் பிரிவை அறிவித்தார். இது தொடர்பான காரணங்கள் இதுவரையில் அவர் எங்கும் கூறவில்லை.
சர்ச்சை பதிவால் கொந்தளிப்பு
இப்படியொரு நிலையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் புயல், மழை ஏற்பட்டு மக்கள் அதிகமான இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகிறார்.
அந்த வகையில், "என்னுடைய முதல் தாய் வீடு என்னை கைவிட்டுவிட்டது. என்னுடைய இரண்டாவது தாய்வீடான தெலங்கானா என்னை காப்பாற்றியிருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த இணையவாசிகள் “ நீங்கள் வாழும் இடம் தெலுங்கானாவாக இருக்கலாம். ஆனால் உங்களுக்கு வாழ்க்கை கொடுத்தது சென்னை தான்..” என கொந்தளிக்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் ரம்யா மீதான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |