மாயா- பூர்ணிமா ஆட்டத்தை வீழ்த்திய விஷ்ணு.. கேப்டனாக செய்த முதல் வேலை இதுவா?
பிக்பாஸ் வீட்டில் முதல் வேலையாக விஷ்ணு, மாயாவின் ஆட்டத்தை அடக்கியுள்ளார்.
பிக்பாஸ்
நாம் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி ஆரம்பமாகி தற்போது 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அரண்மனை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில நிக்ஷன் அரசராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மற்ற வாரங்கள் போல் அல்லாமல் இந்த வாரம் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய நிக்ஷன் சர்வதிகார ஆட்சி முறை என்றால் என்ன? என்பதனை மக்களுக்கு செய்து காட்டி வருகிறார்.
பிரதீப் விடயத்தில் பிளவுப்பட்ட போன மாயா - விசித்திரா இருவரும் பூகம்பம் டாஸ்க் மூலம் ஒன்றாக இணைந்து விட்டார்கள்.
இவ்வாறான டுவிஸ்ட்களுடன் கடந்த வாரம் சென்ற நிலையில் இந்த வாரம் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
கடுப்பான மாயா
இந்த நிலையில் மாயா - பூர்ணிமா ஆதரவால் கேப்டனான விஷ்ணு தற்போது அவர்களுக்கு எதிராகவே மாறியுள்ளார்.
அந்த வகையில் பொருட்களை வாங்குவதில் பொறுப்பில்லாத போட்டியாளர்கள் இருவரை தெரிவு செய்து பொருட்களை வாங்கும் டாஸ்கிற்கு அனுப்ப வேண்டும் என விஷ்ணுவிடம் கூறப்பட்டது.
இதற்காக அனன்யா மற்றும் மாயா இருவரையும் விஷ்ணு தெரிவு செய்துள்ளார்.
இதனால் கடுப்பான மாயா “ நீங்க எல்லாம் குறி வைத்து தான் செய்றீங்க.. நீங்க தலைவராக என்னையும் பூர்ணிமாவையும் யூஸ் பண்ணீங்க..” என கடுப்பில் கத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து இன்றைய தினம் எப்படி செல்கிறது என்பதனை எபிசோட்டில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |