போட்டியாளர்களை திக்குமுக்காட வைத்த கமல்.. வாயடைச்சு போன மாயா, பூர்ணிமா!
தலைமைக்கு தகுதி வேண்டும் என பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சரவணணை கமல் அவர்கள் சாடையாக கலாய்த்துள்ளார்.
பிக்பாஸ் 7
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனன்யா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
வறுத்தெடுத்த கமல்
இதனை தொடர்ந்து அதிகமான மன அழுத்தம் காரணமாக பவா செல்லத்துரையும் வெளியேறியுள்ளார்.
தற்போது பிக்பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்கள் இருந்து வருகிறார்கள். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அடிக்கடி சண்டைகள் வெடித்து வருவதால் இன்றைய தினம் போட்டியாளர்கள் எப்படி இருக்க வேண்டும் என ஆண்டவர் கூறியுள்ளார்.
அத்துடன் வீட்டிலுள்ள போட்டியாளர்களை சரியாக வழிநடத்துவதற்கு தலைவருக்கு தகுதி வேண்டும் என சரவணனை சுற்றிக்காட்டியுள்ளார்.
மாயா, பூர்ணிமா இருவரையும் கமல் சுற்றி சுற்றி கேள்வி கேட்டதில் அவர்களே மிரண்டு போயுள்ளனர். இப்படி இருக்கும் வகையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |