ராஜ்கிரண் மேல் பழியை தூக்கி போடும் ரவீந்தர்.. சற்றுமுன் வெளியான பகீர் தகவல்!
“ நடிகர் ராஜ்கிரணுக்கு பல இலட்சம் ரூபாய் கடனாக கொடுத்தேன். அவர் தான் இன்னும் திருப்பி தரவில்லை” என தயாரிப்பாளர் ரவீந்தர் புது கதையை ஆரம்பித்துள்ளார்.
ரவீந்தர் - மகாலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'அன்பே வா' சீரியலில் பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. இவரின் வில்லங்கமான நடிப்பிற்கும், குழந்தைத்தனமான சேட்டைகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.
இவர் கதாநாயகி, வில்லி மற்றும் முக்கிய கதாபாத்திரம் இப்படி என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கக்கூடியவராக தன் திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இவர் முதல் திருமண வாழ்க்கை முறிவுற்றது.
இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை காதலித்து செப்டம்பர் 1ஆம் திகதி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மோசடி வழக்கு
இவர்களின் திருமண புகைப்படம் வெளியானதிலிருந்து நயனை விட பிரபல்யமான ஜோடியாக இருவரும் மாறியுள்ளார்கள்.
இப்படியொரு நிலையில் மோசடி வழக்கில் கடந்த மாதம் ரவீந்தர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சரியாக 1 மாதத்திற்கு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இதன்படி, ஜாமீனில் வெளியே வந்த ரவீந்தர் “ 4 திரைப்படங்கள் தயாரித்து வரும் நிலையில் அவர்களுக்கு 16 கோடி ரூபாய் முன் பணமாக கொடுத்த நிலையில், அதனை திருப்பி கேட்டால் தரவில்லை” என புகார் கொடுத்துள்ளார்.
ராஜ்கிரண் மீது பழி
இதனை தொடர்ந்து நடிகர் ராஜ்கிரணுக்கு படத்திற்காக பல இலட்சம் ரூபாய் முன் பணமாக கொடுத்துள்ளாராம். ரவீந்தர் கைதான நிலையில் ராஜ்கிரணுக்கு ஒரு மெசேஜையும் காட்டி பகீர் கிளப்பி உள்ளார்.
மேலும், ஒரு படத்தில் நடிக்க அட்வான்ஸாக வாங்கிய தொகையை நடிகர்கள் திருப்பித் தர வேண்டிய அவசியம் இல்லை தான்.
ஆனால், தயாரிப்பாளர் தலையே ஆபத்தில் இருக்கும் போது, அவசரத்துக்கு கேட்கும் போதும் அவர் கொடுக்காதது தனக்கு வருத்தம் தான் என்றும் ரவீந்தர் பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |