வைல்டு கார்டு எண்ட்ரியை அதிரடியாக களமிறக்கும் பிக் பாஸ்...யார் இந்த பெண் போட்டியாளர் தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மிக விரைவில் வைல்டு கார்டு எண்ட்ரி இருக்கும் என்ற தகவல் வைரலாகி வருகின்றது.
அந்த வகையில் இந்த சீசனில் வைல்டு கார்டு மூலம் பிரபல விஜே பார்வதி எண்ட்ரி கொடுக்க உள்ளாராம்.
மதுரையைச் சேர்ந்த பார்வதி, கடந்த ஆண்டு சர்வைவர் எனும் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.
வைல்டு கார்டு எண்ட்ரி இவரா?
அந்நிகழ்ச்சியில் இருந்து பார்வதி சீக்கிரமே எலிமினேட் செய்யப்பட்டாலும், அவர் இருந்த சில நாட்கள் அனல் பறந்தது என்றே சொல்லலாம்.
இந்நிலையில், பார்வதி தற்போது பிக்பாஸ் வீட்டுக்கு வைல்டு கார்டு எண்ட்ரியக செல்ல உள்ளார்.
நேற்று குறைந்த வாக்குகளினால் மககேஷ்வரி பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அவரின் குறையை தீர்க்க பிக் பாஸ் அதிரடியாக இன்னொரு தொகுப்பாளரை களமிறக்குவதாக ரசிகர்க தற்போதே யூகிக்க தொடங்கிவிட்டனர்.