Bigg Boss: என்னோட சிஷ்யன் யாரு தெரியுமா? கேள்வியால் வினோத்தை அழ வைத்த பிக்பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்ஃஜே, பார்வதி, திவாகர் மூன்று பேரை பிக்பாஸ் சிறைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த மாதம் 5ம் தேதி ஆரம்பமாகியது. இதில் 20 பேர் கலந்து கொண்டனர்.
பின்பு வைல்டு கார்டு போட்டியாளர்களாக நான்கு பிரபலங்கள் உள்ளே சென்றனர். தற்போது வரை ஆறு பேர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் பிரவீன் எவிக்ஷன் போட்டியாளர்களிடையே கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது வரை நாமினேஷனுக்கு வாராமல் இருந்த கனி தற்போது முதன்முறையாக வந்துள்ளார்.
இந்த வாரம் வீட்டில் தலைவராக சக்தி இருக்கும் நிலையில், இதற்கான போட்டியில் பாருவை கடுமையாக தள்ளிவிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில் நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற டாஸ்கினை போட்டியாளர்கள் சரியாக செய்யாததால் இனிமேல் தனது குரலால் தானும் டாஸ்கில் பங்கு பெறப்போவதாக பிக் பாஸ் அறிவித்தார்.
பின்பு வினோத்தை எழுப்பி என்னோட சிஷ்யன் யார் தெரியுமா? என்று கேட்டார். அதற்கு வினோத் சாண்டி என்று கூறினார். அவரோட நண்பர் தானே? என்னோட சிஷ்யன் யாரிடமாவது சண்டை போட்டுள்ளாரா? என்றும் கேட்டார்.
அதற்கு வினோத் இல்லை என்று பதிலளித்தார். என்னோட சிஷ்யன் அனைவரையும் சிரிக்க வைக்க தவறியதில்லை என்று கூறி வினோத்தை அழ வைத்துள்ளார்.
முதல் ப்ரொமோ
இதில் திவாகர் ராணியாக இருக்கும் பாருவை புகழ்ந்து பேசியதுடன், எதிரே இருக்கும் மற்றொரு சாம்ராஜ்யத்தினை தரகுறைவாக பேசியுள்ளார். இதில் வினோத் எந்தவித கோபமம் கொள்ளாமல் தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.
இரண்டாவது ப்ரொமோ
இந்த ப்ரொமோ காட்சியில் தற்போது 39 நாட்கள் ஆகியுள்ள நிலையில், போட்டியாளர்களின் திறமையின் அடிப்படையில் பிக் பாஸ் வரிசைப்படுத்தக் கூறியுள்ளார். இதில் கடைசி மூன்று இடத்தில் எப்ஃஜே, பாரு, திவாகர் என மூன்று பேர் இருக்கின்றனர்.
மூன்றாவது ப்ரொமோவில் கடைசி இடத்தினைப் பிடித்த மூன்று பேரையும் பிக்பாஸ் ஜெயிலுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |