பிக் பாஸில் வெளியேறிய ஆதிரைக்கு பிக் பாஸ் கடைசியாக சொன்னது - இது தேவையா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர் ஆதிரை வெளியேற்றப்படும் போது பிக் பாஸ் கூறிய விடயம் தற்போது ரசிகர்களிடம் பேசும் பொருள் ஆகியுள்ளது.
பிக் பாஸ் 9
கடந்த அக். 5 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை, நடிகர் விஜய்சேதுபதி வித்தியாசமான முறையில் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக் பாஸ் வீடு இம்முறை சூப்பர் டீலக்ஸ் வீடு, பிக் பாஸ் வீடு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. சூப்பர் டீலக்ஸ் வீடு சொகுசு வசதிகளுடனும், பிக் பாஸ் வீடு அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

சூப்பர் டீலக்ஸ் வீட்டில் இருவருக்கு நாமினேஷன் ஃபிரி பாஸ் வழங்கப்படும். மற்றவர்கள் வெளியேறத் தேர்வு செய்யப்பட்ட (நாமினேஷன்) நபர்களின் பட்டியலில் இணைவார்கள்.
இந்த வாரத்திற்கான எவிக்ஷன் நாமினேஷன் லிஸ்டில் இவானா, கானா வினோத், சுபிக்ஷா, பிரவீன், ஆதிரை, அரோரா, துஷார், அகோரி கலை ஆகியோர் இருந்தனர்.

இந்த நாமினேஷன் பட்டியலில் அகோரி கலை, ஆதிரை, ஆரோரா, துஷார் இவர்கள் 4 பேரில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டது.
அதில் இந்த வாரம் கடுமையான நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற போட்டியாளராக இருந்தது ஆதிரை என்பதால் பிக் பாஸ் குழு ஆதிரையை வெளியேற்றியது.

இதில் ஆதிரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது பிக் பாஸ் ஆதிரைக்கு இந்த வீட்டில் நீங்கள் மிகவும் சிறப்பான போட்டியாளர் நீங்கள் இவ்வளவு சீக்கிரமாக வெளியேற வேண்டிய அவசியமே இல்லை. என கூறி வழி அனுப்பி வைத்தார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |