சரிகமப - வில் தெரிவாகிய 2வது இறுதிச்சுற்று போட்டியாளர்: உணர்ச்சியால் நிறைந்த தருணம்
சரிகமப வில் இரண்டாவது இறுதிச்சுற்று போட்டியாளர் இந்த வாரம் டூயட் சுற்றில் தெரிவாகி உள்ளார்.
சரிகமப
பல சுற்றுக்களை கடந்து வந்த சரிகமப நிகழ்ச்சியில் இந்த வாரம் டூயட் சுற்று நடைபெற்றது. இறுதிச் சுற்றுக்கு மொத்தம் ஐந்து போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
இதில் ஒரு போட்டியாளர் கடந்த வாரம் வரை இறுதிச்சுற்று போட்டியாளராக இருந்தார். அவர் தான் சுஷாந்திக்கா. இதனை தொடர்ந்து இன்னும் நான்கு போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
இதில் கடந்த வாரம் சரிகமப சங்கமம் நடைபெற்றதால் இரண்டாவது போட்டியாளர் தெரிவு செய்யப்படவில்லை. அந்த வகையில் இந்த வாரம் டூயட் சுற்று நடைபெற்றது.

இதில் மொத்தம் ஆறு போட்டியாளர்கள் கோல்டன் பெர்போமன்ஸ் பாராட்டை பெற்றுக்கொண்டனர். இதில் ஒரு போட்டியாளர் இறுதிச்சுற்றுக்கு இந்த வாரம் தெரிவு செய்யப்படுவார்.
அந்த வகையில் நடுவர்கள் போட்டியாளர் ஸ்ரீகரியை இரண்டாவது இறுதிச்சுற்று போட்டியாளராக தெரிவு செய்துள்ளனர்.
அதுவும் போட்டியாளர் ஸ்ரீகரியின் தாய் தந்தை முதன் முறையாக இன்று தன்னுடைய மகனின் பெர்போமன்ஸ் பார்ப்பதற்காக சரிகமப அரங்கத்திற்கு வந்திருந்தார்கள்.

இப்படி இருக்க ஸ்ரீகரி அவர்கள் முன்னிலையில் இரண்டாவது இறுதிச்சுற்று போட்டியாளராக தெரிவானது உணச்சிகளால் சொல்ல வார்த்தை இல்லை என்னும்படியாக இருந்தது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |