பெட்டியை சும்மா தூக்கிட்டு வர சரத்குமாருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் இத்தனை லட்சமா? ஷாக்கில் ரசிகர்கள்
பொதுவாக பெரிய நடிகர்கள் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள் என்றால் அவர்களுக்கு பெரிய தொகை சம்பளமாக வழங்கப்படும்.
அந்த வகையில் பிக் பாஸ் வீட்டிற்குள் பணப் பெட்டியை எடுத்து சென்ற சரத்குமாருக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
நடிகர் சரத்குமாருக்கு டிவி நிகழ்ச்சி ஒன்றும் புதிதான விஷயம் அல்ல. இவர் ஏற்கனவே சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன் ஒளிபார்ப்பான ‘கோடீஸ்வரன்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

அந்த நிகழ்ச்சி மாபெரும் வெற்றியடைந்து. அந்த நிகழ்ச்சிக்கு பின்னரே விஜய் டிவியில் உங்களில் யார் கோடீஸ்வரன் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.
இந்த நிலையில் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த நடிகர் சரத்குமாருக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். அவர் கொண்டு வந்த பெட்டியிலேயே 3 லட்சம் தான் வைக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.