சாண்டி மாஸ்டர் மகனுக்காக செய்த காரியம்! இனி எம்மதமும் சம்மதம்... இணையத்தினை கலக்கும் மகனின் புகைப்படம்
கிறிஸ்துவராக இருந்தும் தன் மகனுக்கு சாண்டி கிருஷ்ணர் வேடம் போட்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலம் பிரபல நடன இயக்குனரான சாண்டி மக்கள் மத்தியில் பிரபலமானார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் பயங்கர பிசியாகி விட்டார். இறுதியாக இவர் விக்ரம் படத்தில் பத்தல பத்தல பாடலுக்கு நடனம் அமைத்திருந்தார்.

வேலை ஒரு பக்கம் இருந்தாலும் குடும்பத்துடன் நேரம் ஒதுக்குவதற்கு இவர் தவறுவது இல்லை.
இவருக்கு லாலா என்ற பெண் குழந்தையும், ஷான் மைக்கேல் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். சாண்டி மனைவிக்கு சமீபத்தில் தான் ஆண் குழந்தை பிறந்து இருந்தது.
இந்த நிலையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தன் மகனுக்கு கிருஷ்ணன் வேடம் அணிவித்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் சாண்டி.
கிறிஸ்துவராக இருக்கும் இவர் அனைத்து மதங்கள் மீதும் சம மரியாதை வைத்துள்ளார். இதனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.