அதிகாரப்பூர்வமாக விவாகரத்தை அறிவித்த வாரிசு பட நடிகை- ஆறுதல் கூறும் நெட்டிசன்கள்
அதிகாரப்பூர்வமாக கணவரை விவாகரத்து செய்து விட்டதாக வாரிசு பட நடிகை வெளியிட்ட பதிவு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ்.
சுமாராக 100 நாட்கள் ஒரே வீட்டில் போட்டியாளர்கள் போட்டியிட்டு ஜெயிக்க வேண்டும்.
கடைசியாக பிக்பாஸ் 8வது சீசன் முடிவுக்கு வந்தது, இதில் முத்துக்குமரன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சி மூலம் பலர் பிரபலமாகி இருக்கிறார்கள்.
அப்படி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் தான் நடிகை சம்யுக்தா.
விவாகரத்து அறிவிப்பு
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சம்யுக்தா, பெற்றோர் விருப்பப்படி கார்த்திக் சங்கர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ராயன் என்ற மகன் ஒருவரும் உள்ளார்.
கொரோனா காலப்பகுதியில் சம்யுக்தாவின் கணவர் துபாயில் இருந்த ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த விஷயம் தெரியவந்துள்ளது. இதனால் தன்னுடைய கணவருடன் இனி வாழ முடியாது என விவாகரத்து செய்ய முடிவு செய்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா, விவாகரத்திற்கான தனது பேப்பர் வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த செய்தி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளதுடன், பலரும் சம்யுக்தாவிற்கு ஆறுதல் கூறும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
