பிரபல நடிகையின் மகனுடன் பிக்பாஸ் ஜூலி நெருக்கம்?
பிக்பாஸ் ஜூலி மற்றும் ஷாரிக்கான் இருவரும் டேட்டிங் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் ஜூலி
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனத்தையும் ஈர்த்த ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
அங்கே இவரது நடவடிக்கைகள் கிண்டலுக்கு ஆளானது. ஜூலியை ட்ரால் செய்பவர்களைப் போலவே அவருக்கான ரசிகர்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
முதல் சீசனில் கலந்து கொண்ட ஜூலியும், 2ஆம் சீசனில் பங்கேற்ற நடிகர் ரியாஸ்கானின் மகன் ஷாரிக்கும் நெருங்கிப் பழகி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே இவர்களது நட்பு தொடர்ந்து வரும் நிலையில், இருவரும் டேட்டிங் செய்வதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
டேட்டிங்?
இந்நிலையில், ஷாரிக்குடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ஜூலி தெரிவித்திருப்பதாவது, ‘A Sweet Friendship, Refreshes the Soul’ என்ற கேப்ஷனுடன் அவர் பகிர்ந்திருக்கிறார்.
ஏற்கனவே, இருவரும் டேட்டிங் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், இந்தப் புகைப்படங்களை ஜூலி பகிர்ந்திருப்பது இந்தத் தகவலை உறுதி செய்கிறதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.