தன்னை மீறி வெளிப்படும் காதல்... ரவீனாவால் சோகத்தில் மணி சந்திரா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரவீனா விலகிச் செல்வதாக மணி சந்திரா மனதளவில் கஷ்டப்படுவதாக கூறியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார்.
பின்பு பவா செல்லத்துரை வீட்டில் இருப்பது பிடிக்காமல் பிக்பாஸிலிருந்து வெளியேறினார். இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சினையும் இரண்டாகவே இருந்து வருகின்றது.
இந்த வாரத்திற்கான தலைவராக பூர்ணிமா இருந்து வருகின்றார். இன்றைய தினத்தில் மூன்றாவது ப்ரொமோ தற்போது வெளியாகியுள்ளது.
இன்றைய தினத்தில் பிக் பாஸ் புதிய டாஸ்க் கொடுத்ததால் மீண்டும் போட்டியாளர்கள் மோதிக் கொண்டனர். தற்போது மணி சந்திரா மற்றும் ரவீனா இருவரும் பேசிக்கொள்ளும் ரொமான்ஸ் காட்சி ப்ரொமோவாக வந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |