Bigg Boss: பாருவின் காலில் விழுந்த வீட்டு தல... கம்ருவின் சுயரூபம் மீண்டும் ஆரம்பம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாருவின் காலில் பிக்பாஸ் வீட்டின் இந்த வார தலைவரான ரம்யா விழுந்துள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 5ம் தேதி ஆரம்பமாகியது. 24 போட்டியாளர்கள் உள்ளே இருந்த நிலையில் தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
கடந்த வாரம் விஜய் சேதுபதி எலிமினேஷன் எதுவும் இல்லை என்று எவிக்ஷன் கார்டை கிழித்துப் போட்டு போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டின் தலைவராக ரம்யா இருந்து வருகின்றார். இந்த வாரத்திற்கான புதிய டாஸ்க்கை பிக்பாஸ் கொடுத்துள்ளார். அதாவது ஜமீன்தார் என்ற டாஸ்க்கில் விலையுயர்ந்த நெக்லேஸை எந்த அணியினர் பாதுகாப்பாக வைக்கின்றனர் என்பது தான் டாஸ்க்.
இதில் கம்ருதின் அமைதியாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் சுயரூபத்தினைக் காட்டியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த வாரத்தில் வீட்டின் தலைவராக இருக்கும் ரம்யா பாருவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆக மொத்தம் இந்த வாரமும் விஜய் சேதுபதி எல்லா போட்டியாளர்களையும் சரமாரியாக பேசி பாடம் கற்பிப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |