பிக்பாஸ் வெற்றியை தட்டி தூக்கிய ராஜு…. வெளியே வந்தவுடன் போட்ட முதல் பதிவு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான ராஜு முதன் முதலாக தனது பதிவினை பதிவிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் காணப்படுகின்றது.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ராஜு ஜெயமோகன், இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். அதன் பின்பு பல சீரியல்கள், சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் கொள்ளை கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த போட்டியாளர்களிடம் அன்பாக பழகி வந்த ராஜுவின், கொமடிக்கு ரசிகர்கள் அமையாகியதோடு, அவருக்கு பலத்த ஆதரவு அளித்து பிக்பாஸில் வெற்றி பெற வைத்துள்ளனர்.
தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிறகு முதன்முறையாக ட்விட் செய்துள்ளார். அதில் “தமிழ் மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி ..!” என கூறியுள்ளார்.
தனது மனைவி மற்றும் அம்மா உடன் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால் குறித்த டுவிட்டர் பக்கம் ராஜுவின் அதிகாரப்பூர்வமாக டுவிட்டர் கணக்கு இல்லை என்றும் போலி என்றும் கூறப்படுகின்றது.
நெஞ்சார்ந்த நன்றி தமிழ் மக்களே ? @ikamalhaasan @SanjeeveVenkat pic.twitter.com/ZCCVxR1lOq
— Raju Jayamohan (@RajuJayamohan) January 18, 2022
இந்நிலையில் ராஜு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் வெற்றிக் கோப்பையை பெறும் புகைப்படத்தினை வெளியிட்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.