Bigg Boss 10: எதிர்பாராமல் பிக்பாஸை விட்டு வெளியேறும் ராகவ்! கதறியழும் போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராகவ் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளது போட்டியாளர்களை கண்ணீர் சிந்த வைத்துள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் அன்சர் வீட்டின் தலைவராக இருந்து வரும் நிலையில், எதிர்கட்சி தலைவராக முத்தழகி இருந்து வருகின்றார்.
பிக்பாஸ் எவிக்ஷன் ப்ரீ டிக்கெட்டை காமன் மேன் நிகழ்ச்சியிலிருந்து வந்த போட்டியாளர்களான ஷமா, ஜெய்சன் வென்றுள்ளனர். நேற்றைய தினம் டிடிஎஃப் வாசன் வைர டாஸ்கில் வெற்றிபெற்று எவிக்ஷன் ப்ரீ டிக்கெட்டினை பெற்றுள்ளார்.

இந்த வாரம் டிடிஎஃப் விளையாடிய விதம் ஒட்டுமொத்த போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியது.
விஜய் சேதுபதி இன்று முனியம்மாவை சத்த் போட்டுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக ராகவ் வீட்டை விட்டு வெளியேறுகின்றார்.
ராகவ் காலில் அடிபட்டுள்ளதால் ஆப்ரேஷன் செய்யும் நிலையில் உள்ளதால், பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதற்கு விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |