அப்பாவை நினைத்து மேடையில் கலங்கிய பிரியங்கா...
பிரபல தொகுப்பாளினியான பிக்பாஸ் பிரியங்கா தனது தந்தையை நினைத்து கண்கலங்கியுள்ளார்.
தொகுப்பாளினியாக பிரியங்கா
மக்கள் மத்தியில் தொகுப்பாளினியாக வலம்வந்து மனதினைக் கொள்ளை கொண்டவர் தான் பிரியங்கா. இவர் பிரபல ரிவிியல் அதிகமான நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கியுள்ளார்.
பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரவீன் குமாரும் விஜய் டிவியின் தயாரிப்பு குழுவில் பணியாற்றி விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு,ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவம் இருக்கின்றார்.
குளிர்ச்சியான இடங்களைத் தேடும் பாம்புகள்! ஆபத்தை அறிந்து கொள்ளுங்கள் மக்களே
பிக்பாஸில் கலக்கிய பிரியங்கா
பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்ட இவர் தனது உண்மையான முகத்தினை வெளிப்படுத்தினார். மேலும் வீட்டிற்குள் தனக்கென்று ஒரு ஸ்டைல் வைத்துள்ளார்.
தனது சுட்டித்தனமான குழந்தை முகத்தினை ரசிகர்களுக்கு காட்டிய பிரியங்கா தான் கடந்து வந்த பாதையில் தனது தந்தையைக் குறித்து தான் பேசியிருந்தார்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை வந்த பிரியங்கா இரண்டாவது இடத்தினை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியங்காவிற்கு விருது
பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியினை தொடர்ந்து தொகுப்பாளினியாக வலம்வரும் இவர் சமீபத்தில் ஹைத்ராபாத்திற்கு அபிஷேக், மது இவர்களுடன் அடித்த லூட்டியினைக் காணொளியாக வெளியிட்டிருந்தார்.
தொகுப்பாளினியாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கடந்த நிலையில், ஐகானிக் வுமன் என்ற விருது கிடைத்துள்ளது.
இதுகுறித்து பிரியங்கா கூறுகையில், கடந்த 13 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக மக்களை முகத்தை அவதானிப்பதில் பெருமைப்படுகிறேன்... நான் எவ்வளவு சோகமாகவோ, பிரச்சனை வந்தாலும் மேடை ஏறி விட்டேன் என்றால், எல்லோரையும் சந்தோசப்படுத்த வேண்டும் என்று கவலை எல்லாம் மறைத்துக் கொண்டு இருப்பேன்.
இவற்றை தனது தாயிடமிருந்து தான் கற்றுக்கொண்டதாக கூறியுள்ளார். தனது தாய்க்கு தந்தையின் நினைவு வரும் போது அதனை எங்களிடம் காட்டிக்கொள்ளாமல் எதுவாக இருந்தாலும் அவரே சமாளிப்பார் இதனை பார்த்து வளர்ந்த தானும் தனது தம்பியும் அம்மா இல்லையென்றால் நாங்கள் இல்லை என்று கூறியுள்ளார்.
பிக்பாஸில் என்னை விரும்புற அனைவருக்குமே நான் நிறைய அன்பை கொடுப்பேன். வெறுப்பவர்களுக்கும் என் அன்பை கொடுப்பேன் என்று பிரியங்கா கூறியதற்கு பல மோசமான கருத்துகள் வந்து கஷ்டப்படுத்தியதாகவும், தயவுசெய்து கஷ்டப்படுத்தி கமண்ட் பண்ணாதீர்கள் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.