இந்த வாரம் எவிக்ஷனில் ட்விஸ்ட் வைத்த பிக்பாஸ்: வெளியான அப்டேட்
சற்றுமுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ்
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த வாரங்களிலிருந்து பிக்பாஸ் வீட்டில் டாஸ்க்கள் அதிகமாகி வருகின்றது. இதனால் போட்டியாளர்கள் தங்களை அதற்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நிக்ஷனை காப்பாற்றிய பிக்பஸ்
இந்த நிலையில் இன்றைய தினம் கொடுக்கப்பட்ட கல்லூரி டாஸ்க்கில் நிக்ஷனின் வாதத்தை கண்டு மிரண்டு போய் விட்டார்கள்.
ஸ்மால் பாஸ் வீட்டில் ஒற்றை ஆளாக நாமினேஷில் சிக்கிய நிக்ஷனை காப்பாற்றும் வகையில் புயலை காரணமாக வைத்து எவிக்ஷனை இரத்து செய்துள்ளார்கள்.
இது புயலுக்காக செய்தது போல் தெரியவில்லை. மாறாக நிக்ஷன் தற்போது தான் விளையாட ஆரம்பித்துள்ளார்.
இவர் இனி தொடர்ந்து நன்றாக விளையாடுவார் என எதிர்பார்க்கும் பிக்பாஸ் குழு திட்டமிட்டு செய்திருக்கலாம் என கருத்துக்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் பிக்பாஸ் குழுமம் வெளியிட்ட அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |