பிக்பாஸ் வியானாவுடன் பார்வதி போட்ட ஆட்டம்... நீண்ட நாட்களுக்கு பின்பு வெளியான காணொளி
பிக் பாஸ் பார்வதி மற்றும் வியானொ சேர்ந்து ஆட்டம் போட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக் பாஸ் பார்வதி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்வதியும் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் உள்ளே கம்ருதினைக் காதலித்து வந்த நிலையில், இவரது காதலுக்கு பார்வதியின் அம்மாவும் சம்மதம் தெரிவித்தார்.
ஒரு கட்டத்தில் கம்ருதின், பார்வதி இருவரும் சேர்ந்து போட்ட ஆட்டம் அதிகமாகவே பிக்பாஸ் ரெட் கார்டு கொடுத்து இருவரையும் வெளியேற்றியது.

ப்ரஜன் மனைவி சாண்ட்ரா போட்டியாளர்களாக உள்ளே கலந்து கொண்ட நிலையில், சாண்ட்ராவைக் காலால் எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டார் பாரு, கம்ருதின். இதனால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு ரெட் கார்டு கொடுத்து முற்றுப்புள்ளி.
முதன்முறையாக ஒரே சீசனில் ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு ரெட்கார்டு வழங்கியது பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது.
முட்ட கலக்கி பாடலுக்கு ஆட்டம்
பார்வதி, கம்ருதின் இருவரையும் பிக்பாஸ் இறுதி மேடைக்கு வரவழைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில் பிக்பாஸ் வியானா மற்றும் பார்வதி இருவரும் நடனமாடிய காணொளி இன்ஸ்டாவில் வெளியாகியுள்ளது.
பார்வதி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், முட்ட கலக்கி பாடலுக்கு இவர்கள் இருவரும் ஆடிய நடனத்தினை பார்த்து ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
10 மில்லியன் வியூஸ் கடந்து டிரெண்டான அந்த பாடல் இளைஞர்கள் மத்தியிலும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுபவர்கள் மத்தியிலும் பிரபலமாகி உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |