Viral Video: ரசிகர்கள் கொடுத்த மிகப்பெரிய சர்ப்ரைஸ்! நடுரோட்டில் ஆட்டம் போட்ட பாரு
பிக்பாஸில் கலந்து கொண்டு பல சர்ச்சையில் சிக்கிய பார்வதிக்கு ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள நிலையில் அவரது காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் தான் பார்வதி.
ஆரம்பத்தில் அருமையாக விளையாடி வந்த பார்வதி கம்ருதின் மீது காதல் ஏற்பட்டு, பல சர்ச்சையில் சிக்கினார். கடைசி நிகழ்ச்சி முடிவதற்கு ஒரு சில நாட்கள் இருந்த நிலையில் ரெட் கார்டு பெற்று வெளியேறினார்.

பின்பு கம்ருதின், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியே வந்தாலும், மீண்டும் கிராண்ட் பினாலே அன்று மீண்டும் மேடைக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் இவர்களுக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ள நிலையில், அவர்கள் கொடுக்கும் வரவேற்பில் பார்வதி பிரமிப்பில் காணப்படுகின்றார். தற்போதும் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பும், அதற்காக அவர் நடனமாடி தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்திய காட்சி வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |