இந்த நபர் வீட்டிற்கு தேவையில்லை! கமல் முன்பு உடைத்த போட்டியாளர்கள்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சி கமல் வருகையால் பயங்கரமாக கலைகட்டியுள்ளது ப்ரொமோ காட்சியில் தெரிகின்றது.
பிக்பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் 10 பெண் போடியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள் மற்றும் 1 திருநங்கை என மொத்த 20 பேர் கலந்துகொண்டுள்ளனர்.
ஆரம்பத்தில் கலகலப்பாக சென்றுகொண்டிருந்த இந்நிகழ்ச்சியில் கடந்த இரு தினங்களாக சண்டையும் ஆரம்பித்துள்ளன.
பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் அதிகளவிலான ரசிகர் பட்டாளத்தை கொண்ட போட்டியாளர் என்றால் அது ஜிபி முத்து தான். அவருக்கென ஆர்மி தொடங்கி, டுவிட்டரில் டிரெண்டாகும் அளவுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

கமலின் கேள்விக்கு போட்டியாளரின் பதில்
பொதுவாக சனி, ஞாயிறு கிழமைகளில் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிலையில், இதனை காணவே ரசிகர் பட்டாளம் அதிகமாகவே காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று வந்த கமல்ஹாசன் இந்த வீட்டிற்கு வந்திருக்க வேண்டாம் என்று போட்டியாளர் ஒருவரை காண்பிக்க கூறுகின்றார். இதில் தங்களது தெரிவுகளை போட்டியாளர்கள் கூறி வருகின்றனர்.