பிக் பாஸில் அதிரடியாக பிறப்பிக்கப்பட்ட Arrest Warrant... ஜெயிலில் கண்ணீருடன் இரண்டு போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு பெண் போட்டியாளர்கள் சிறைக்கு சென்றுள்ள சம்பவம் சக போட்டியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் தொகுப்பாளராக இந்த ஆண்டும் கமல்ஹாசனே இருந்து வருகின்றார். உள்ளே சென்ற முதல் நாளே 6 போட்டியாளர்கள் வேறு வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
நேற்றைய தினத்தில் அனன்யா பிக்பாஸிலிருந்து வெளியேறிய நிலையில், வீட்டின் தலைவராக சரவண விக்ரம் இருந்து வருகின்றார்.
ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே சண்டையும், சச்சரவுமாக செல்லும் பிக்பாஸில் இன்றைய மூன்றாவது ப்ரொமோ வெளியாகியுள்ளது.
சிறையில் பெண் போட்டியாளர்கள்
மக்களை மகிழ்ச்சியாக வைக்காத இரண்டு போட்டியாளர்களை பிக்பாஸ் கண்காணித்து அவர்களை சிறையில் அடைப்பதற்கு Arrest Warrant பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் மக்கள் மனதை கவராத போரிங் போட்டியாளர் என்று அக்ஷயா, வினுஷா தெரிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதாக பிக்பாஸ் கூறியுள்ளனர்.
பிக்பாஸ் கூறியதைக் கேட்டு அக்ஷயா கண்ணீர் வடித்து கதறியழுதுள்ளது பார்வையாளர்களை சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |