பொது இடத்தில் பிரபல நடிகையின் சேலையை பிடித்து இழுத்ததால் பரபரப்பு
மும்பையில் திருமண பார்ட்டி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற பாலிவுட் நடிகை வித்யா பாலனின் சேலையை நபர் ஒருவர் இழுத்ததால் சிறிது நேரம் பரபரப்பானது.
திருமண வரவேற்பு
மும்பையில் நடிகர் சன்னி கபூர் மற்றும் குனீத் மோங்காவின் திருமணம் நேற்று நடந்தது.
திருமணத்துக்கு முன்னர் புதுமணத்தம்பதியினர் பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் உறவினர்கள், திரைத்துறை நண்பர்களும் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்காக பிரபல நடிகை வித்யா பாலன், அவரது கணவருடன் வருகை தந்தார்.
சேலையை பிடித்து இழுத்த நபர்
அப்போது நுழைவாயிலில் உள்ளே நுழைந்த போது எதிரே வந்த நபர் ஒருவர் சேலையை பிடித்து இழுத்தார்.
உடனடியாக சுதாரித்துக்கொண்ட வித்யா பாலன் சேலையை இறுகப்பிடித்துக் கொண்டதுடன் சுவற்றின் பக்கம் திரும்பி சரிசெய்து கொண்டார்.
ஆனால் எதுவும் நடக்காதது போல் அந்நபர் மன்னிப்பு கூட கேட்காமல் கடந்து சென்றுவிட்டார்.
இந்த காட்சிகள் வெளியாகி வைரலாக பலரும் குறித்த நபருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.