என்னால இருக்க முடியலை! பிக் பாஸை விட்டு வெளியேறும் முடிவில் மணி... நடந்தது என்ன?
பிக் பாஸ் வீட்டில் ரவீனா மற்றும் மணி இருவரும் பேசிக் கொண்டிருக்கையில், நிக்ஷனின் செயலால் வெளியேறுவதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா என 9 பேர் வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது 50 நாளை கடந்து செல்லும் பிக் பாஸில் யாரும் எதிர்பாராத திருப்பம் அரங்கேறியுள்ளது. இந்த வாரம் வைக்கப்பட்ட பூகம்பம் டாஸ்கில் தோல்வியடைந்த மூன்று பேர் வெளியேற உள்ள நிலையில், ஏற்கனவே வெளியே சென்ற போட்டியாளர்கள் உள்ளே வரவுள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் நிக்ஷன் நடந்து கொள்ளும் விதம் மணிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம் மணி தன்னால் இருக்க முடியாது... பொறுத்துக் கொள்ளவும் முடியவில்லை என்றும் அப்படி இல்லையெனில் நான் வெளியேறுகிறேன் என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |