பட வாய்ப்பிற்காக லாஸ்லியா போட்ட ப்ளான் - சொந்த நாட்டிற்கே திரும்பி செல்லும் பரிதாப நிலை!
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் தான் லாஸ்லியா. அதிகளவும் பிரபலமான இவருக்கு ஆர்மிகள் என சொல்லி ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
பிக்பாஸ் வீட்டில் இருந்த போதே நடிகர் கவின் உடன் காதல் வயப்பட்டு சர்ச்சையில் சிக்கி தந்தையின் கோபத்துக்கும் ஆளாகியிருந்தார்.

பட வாய்ப்பு இல்லை
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும், விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் எழுந்தது.
ஆனால், அவை அனைத்தும் டிராமா என்று பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு தான் தெரிந்தது. கவின் உண்மையாக காதலித்த போதும் லாஸ்லியா அவரை பட வாய்ப்புக்காக பயன்படுத்திக் கொண்டார் என்ற ஒரு பேச்சும் எழுந்தது.
பின் லாஸ்லியாவின் ப்ளான் படியே அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தன. இதற்காக உடல் எடையை குறைத்து படங்களில் நடித்து வந்தார்.

வருத்ததில் லாஸ்லியா
ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு இவர் நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. இதனால் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கும் லாஸ்லியா போட்ட பிளான் எல்லாம் சொதப்பியதை நினைத்து வருத்தத்தில் இருக்கிறாராம்.
மேலும், இனி தமிழ் சினிமாவில் தாக்கு பிடிக்கவும் முடியாது என தெரிந்துகொண்டு சொந்த நாட்டிற்கே திரும்பி செல்லும் முடிவில் இருக்கிறாராம்.
லாஸ்லியாவை நினைத்து நெட்டிசன்கள் கலாய்த்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவில் புகழ் அடைந்தவர்கள் குறைவு தான் என சொல்லவேண்டும்.