பிக்பாஸில் தலைவர் டாஸ்கில் ஷிவின் செய்த காரியம்! இறுதியில் கதறியழுத சோகம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நடைபெற்ற தலைவர் டாஸ்கின் போது ஷிவின் மற்றும் அசீம் இருவரும் விளையாடிய விதம் அனைவரையும் காமெடியில் ஆழ்த்தியுள்ளது.
பிக்பாஸ் தலைவர்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்றைய தினம் ராபர்ட் மாஸ்டர் வெளியேறிய நிலையில், இன்று இந்த வாரம் தலைவர் பதவிக்கு போட்டி அரங்கேறியுள்ளது.
தலைவர் பதவிக்கு ஷிவின், விக்ரமன், அசீம் என மூன்று போட்டியிட்ட நிலையில், பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் என்னவெனில் கேப்டன் என்ற ஆங்கில எழுத்துக்களை சேர்ப்பதே ஆகும்.
இதில் ஷிவின் சற்று குட்டையாக இருப்பதால் அவரால் வரும் பந்துகளை எடுக்கமுடியவில்லை. ஒரு கட்டத்தில் அசீம் தோள் மீது ஏறி நின்றவரை, அசீம் நொடிப்பொழுதில் முன்னே கொண்டு வந்துள்ளார்.
இவ்வாறு தலைவர் டாஸ்க் கொமடியில் நடைபெற்று இறுதியில் அசீம் தலைவராக வெற்றிபெற்றார். அசீம் தலைவராக வெற்றிபெற்ற பின்பு, ஷிவின் விளையாட்டாக பேசிய வார்த்தையால் சண்டை எழுந்துள்ளது.
ஷிவின், அசீமை பார்த்து சும்மாவே குதி குதினு குதிப்பீங்க.. தற்போது கேப்டனாக வேற ஆகிட்டீங்க... எப்படி உங்களிடம் எல்லாரும் மாட்டிட்டு நிற்கபோறோமோ என்று கேட்டது வாக்குவாதத்தில் முடிந்து இறுதியில் ஷிவி்ன் அழுதுள்ளார்.