மேடையில் மனைவியிடம் அத்துமீறிய ஜிபி முத்து! வெட்கத்தில் ஒட்டுமொத்த பிரபலங்கள்
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கிய வரும் ஜிபி முத்து பிக்பாஸ் கொண்டாட்டத்தில் மனைவிக்கு காதலைக் கூறி முத்தம் கொடுத்துள்ள சம்பவம் அனைவரையும் வெட்கப்பட வைத்துள்ளது.
பிக்பாஸ் கொண்டாட்டம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக கலந்து கொண்டு முதல் வாரத்திலேயே தலைவராக மாறிய ஜிபி முத்து இரண்டு வாரத்தில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.
தனது மகன் மீது வைத்திருந்த பாசத்தினால் அவர் வெளியேறிய நிலையில், தற்போது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வருகின்றார்.
இவர் கோமாளியாக தற்போது வலம் வந்தாலும் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியிலும் வெற்றியை தட்டிச்செல்லும் முதல் நபராக இருந்து வருகின்றார்.
தற்போது பிக்பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி ப்ரொமோ காட்சியில், தனது மனைவிக்கு காதலைக் கூறி எதிர்பாராத விதமாக முத்தம் கொடுத்து அனைவரையும் வெட்கத்தில் ஆழ்த்தியுள்ளார்.