ரஞ்சிதமே பாடலை பாடிய அமுதவானனை அசிங்கப்படுத்திய ஜிபி முத்து! வைரல் காட்சி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த அமுதவானன் மற்றும் ஜபி முத்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் போட்டியாளர்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் அமுதவானன் மற்றும் ஜிபி முத்துவும் அடங்குவார். அமுதவானன் கடைசிவரை நின்று விளையாடி இறுதியில் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.
ஆனால் ஜிபி முத்து இரண்டு வாரங்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் தாக்குபிடித்த நிலையில், மகன் ஞாபகத்தால் வீட்டை விட்டு வெளியேறினார்.
பிக்பாஸ் சீசன் முடிந்த நிலையில், தற்போது பிக்பாஸ் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. ஆம் ஒவ்வொரு ஆண்டும் பிக்பாஸ் முடிந்ததும் இந்நிகழ்ச்சியினை பிரபல ரிவி நடத்தி வருகின்றது.
இதற்கு போட்டியாளர்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் அந்த செட்டில் அமுதவானன் ஜிபி முத்துவிற்கு ரஞ்சிதமே பாடலை பாடுவதற்கு கற்றுக்கொடுத்துள்ளார்.
ஆரம்பத்தில் நன்றாக பாடிய ஜிபி முத்து கடைசி வரியில் அமுதவானனை அந்த பாடல் ராகத்திற்குள் கொண்டு வந்து தானாக ஒரு வரியை பாடி அசிங்கப்படுத்தியுள்ளார்.
இக்காட்சியினை அமுதவானன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதையடுத்து, ரசிகர்கள் இக்காட்சியினை வைரலாக்கி வருகின்றனர்.