Bigg Boss: பிக்பாஸில் கெமி வாங்கிய சம்பளம் என்ன? வெளியேறியதற்கு உண்மை காரணம் இதோ
பிக்பாஸிலிருந்து நேற்றைய தினம் வெளியேறிய கெமி வாங்கிய சம்பளம் மற்றும் அவர் வெளியேறியதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 15 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். மொத்தம் 24 போட்டியாளர்களில் தற்போது வரை 9 பேர் வெளியேறியுள்ளனர்.
நேற்றைய தினம் கெமி வெளியேற்றப்பட்டார். இவரின் வெளியேற்றம் சரியானதல்ல என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் கெமி வெளியேற்றத்திற்கு உண்மையான காரணம் என்னவெனில் அவர் படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்திருப்பதால், அதற்காகவே தற்போது வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.

பிக் பாஸ் வீட்டிலிருந்து வந்த கெமி மேடையில் நின்று அழுது கண்ணீர் வடித்ததை தாங்கமுடியாத விஜய் சேதுபதி அவருக்கு தனது கண்ணாடியைக் கொடுத்தார். கடைசியாக அதனை கெமிக்கு வைத்துக்கொள்ளுமாறும் கூறி அசத்தினார்.

விஜய் சேதுபதியின் இந்த செயல் ஒட்டுமொத்த ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கெமி நாள் ஒன்றிற்கு 8 ஆயிரம் வீதம் 50 நாட்களுக்கு 4 லட்சம் ரூபாய் சம்பளமாக பெறுகின்றாராம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |