Bigg Boss: கொளுத்தி போட்ட ஆதிரையால் பாரு எடுத்த முடிவு... முக்கோண காதலுக்கு முற்றுப்புள்ளி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய ப்ரொமோ காட்சி ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 15 போட்டியாளர்கள் உள்ளனர். ஏற்கனவே 9 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் ஒருவரான ஆதிரை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இதனால் எப்ஃஜே, வியானா இருவரும் சோகத்தில் காணப்படுகின்றனர்.

இந்த வார வீட்டின் தலைவராக ரம்யா இருந்துவரும் நிலையில், ஆதிரை பார்வதியிடம் கம்ருதின் காதலைக் குறித்து கொளுத்தி போட்டுள்ளார்.
கம்ருதின், பாரு, அரோரா இடையே முக்கோண காதல் போன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் செல்கின்றது. இதனை வெளியே இருந்து அவதானித்து வந்த ஆதிரை தனது கருத்தை முன் வைக்கின்றார்.
ஆதிரையின் பேச்சைக் கேட்ட பாரு அரோராவை பேசுவதற்கு அழைக்கின்றார். அரோராவிடம் இந்த Triangle-ஐ முடிக்கிறோம் என்று பாரு கூறியுள்ளார்.
இவர்கள் எடுக்கும் முடிவு அடுத்து வரும் விளையாட்டை எவ்வாறு கொண்டு செல்லும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |