கமல்ஹாசன் பேரக் குழந்தையுடன் விளையாடிய ஜுலி! சரமாரியாக கலாய்க்கும் ரசிகர்கள்
விக்ரம் படத்தில் கமல்ஹாசனின் பேரக் குழந்தையாக நடித்த குழந்தையுடன் பிக் பாஸ் ஜூலி கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
சாதனை படைத்த விக்ரம் படம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், நரேன், ஷிவானி நாராயணன், காயத்ரி, ஸ்வாதிஷ்டா, காளிதாஸ் ஜெயராம், மைனா நந்தினி, மகேஷ்வரி மற்றும் சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜூன் 3ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியான விக்ரம் திரைப்படம் கடந்த 4 நாட்களில் உலகம் முழுவதும் 175 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து அபார சாதனை படைத்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் படத்தில் அவருக்கு மகனாக காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்வஸ்திகா நடித்துள்ளார்.
அவர்களின் குழந்தையாக 'தர்ஷன்' எனும் ஒரு வயது கூட நிறைவடையாத குழந்தை நட்சத்திரம் ஒன்று படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

கமல் பேரக் குழந்தையுடன் ஜுலி
மகனை பறிகொடுத்த நிலையில், விக்ரம் எனும் பேரக் குழந்தையை கமல்ஹாசன் பாதுகாத்து வளர்க்கும் காட்சிகள். கமல் மார்பில் குழந்தையை போட்டுக் கொண்டு கண்களில் கண்ணீர் கசியும் காட்சிகள் என எமோஷனலாக படம் முழுக்க கமலுக்கும் படத்தில் அவருக்கு பேரக் குழந்தையாக நடித்துள்ள தர்ஷன் பாப்பாவுக்கும் கனெக்ட் ஆகி இருக்கும்.
எதிர்காலத்தில் அந்த குழந்தையும் பிளாக் ஸ்குவாடில் இணையும் என கமல் கூறும் காட்சிகள் கூஸ்பம்ப்ஸாக அமைந்திருக்கும்.
இந்நிலையில், பிக் பாஸ் ஜூலி தியேட்டரில் விக்ரம் படம் பார்த்துக் கொண்டிருந்த அந்த தர்ஷன் குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு டிரெண்டாக்கி உள்ளார்.