பயங்கர வில்லியாக பிக் பாஸ் ஜுலி... கொலைக்கு மேல் கொலை செய்த கொடுமை
பிக் பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு தற்போது பிரபலமடைந்த ஜுலி சீரியல் ஒன்றில் கொடூர வில்லியாக வலம்வருகின்றார்.
பிக் பாஸ் ஜுலி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்ச்சையில் சிக்கியவர் தான் பிக்பாஸ் ஜுலி.
இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு பிரபலமானார். பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓவியா மற்றும் பரணியுடன் மோதி ரசிகர்களின் வெறுப்பினை சம்பாதித்தார்.
பின்பு தொகுப்பாளராக பிரபல ரிவியில் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய இவர், தற்போது தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் வழக்கறிஞராக நடித்து வருகின்றார்.
சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் நடிகர், இவரை வழக்கறிஞருக்கு படிக்க வைத்துள்ளார். இவர் ஏற்கனவே திருமணமான நிலையில், மனைவி மற்றும் குழந்தையை பிரிந்து இருக்கின்றார்.
இதனால் அவர் மீது காதல் ஏற்பட்ட ஜுலி அவரது மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்துவிட்டு காதலனை கரம்பிடிக்க நினைத்துள்ளார்.
ஆனால் தற்போது ஜுலியின் உண்மை முகம் காதலனுக்கு தெரிந்ததால் அவனையும் கொலை செய்வேன் என்றும் பெற்ற தந்தையையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.
பிக்பாஸில் நெட்டிசன்களிடம் சிக்கி சின்னாபின்னமான ஜுலி தற்போது இவ்வாறு ஆக்ரோஷமாக நடித்துள்ளது ரசிகர்களிடையே பரபரப்பாக அவதானிக்கப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |