பிக்பாஸ் ஜூலிக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா? வருங்கால கணவர் இவரா!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான ஜூலிக்கு ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன், வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
பிக்பாஸ் புகழ் ஜூலி
கடந்த 2017ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் தான் ஜூலி. அதில் அவரது போராட்ட திறனை கண்டு மக்கள் தமிழ்பெண், வீர தமிழச்சி என்றெல்லாம் புகழ்ந்து பேசினார்கள்.

அந்த சமயத்தில்தான் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் ஆரம்பிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டின் மூலம் பிரபலமடைந்த ஜூலி அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.

இந்த நிகழ்ச்சியில் மூலம் பட்டித்தொட்டியெல்லாம் பிரபலமான ஜூலிக்கு ஒரு சில படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், எந்தப் படமும் அவருக்கு பெயரும், புகழும் கொடுக்கவில்லை. அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கிவந்தார்.

இந்நிலையில், தற்போது நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது. தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே வெளியிட்டுள்ளார். இருப்பினும் மாப்பிள்ளை யார் என்பதை ரகசியமாக வைத்துள்ளார்.

ஆனால், மாநாடு திரைப்பட பாடலான மெகஹரசைலா பாடலை பின்னணியில் ஒலிக்கவிட்டிருப்பதால்; ஒருவேளை ஜூலியின் வருங்கால கணவர் ஒரு இஸ்லாமியராக இருக்குமோ என்ற சந்தேகம் நெட்டிசன்கள் மத்தியில் எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |