படிப்பு பற்றி மீண்டும் கேட்ட விசித்ரா... ஜோவிகா கொடுத்த பதில் என்ன தெரியுமா?
பிக் பாஸ் வீட்டில் ஜோவிகா தனது படிப்பு குறித்து விசித்ராவிடம் விளக்கம் கொடுத்துள்ளார்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் தொகுப்பாளராக இந்த ஆண்டும் கமல்ஹாசனே இருந்து வருகின்றார். உள்ளே சென்ற முதல் நாளே 6 போட்டியாளர்கள் வேறு வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
கடந்த ஞாயிற்று கிழமை அனன்யா பிக்பாஸிலிருந்து வெளியேறிய நிலையில், நேற்றைய தினம் பவா செல்லத்துரை வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இந்த வாரம் வீட்டின் தலைவராக சரவண விக்ரம் இருந்து வருகின்றார்.
கடந்த வாரம் ஜோவிகாவின் படிப்பு விவாதம் கடுமையாக சென்றது. இதனால் விசித்ரா ஜோவிகா இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டது.
சாப்பாடு பிரச்சினையால் கெப்டனை ரவுண்டு கட்டி அடிக்கும் போட்டியாளர்கள்: பாடாய் படுத்தும் SMALL BOSS வீட்டினர்
பின்பு கமல்ஹாசன் பேசி ஒருவழியாக பிரச்சினை முடிவுக்கு வந்தது. ஆனால் தற்போது ஜோவிகா தனது படிப்பு குறித்து விசித்ராவிற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
Vichitra tries to learn about Jovika's education and understand her POV.
— Bigg Boss Follower (@BBFollower7) October 10, 2023
If this happened last week then probably there wouldn't have been a fight.#BiggBossTamil7 pic.twitter.com/YLsCUHb1cz
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |