மாயாவின் மாஸ்டர் பிளான்.. எது சொன்னாலும் தலையாட்டும் விஷ்ணு- வெடிக்கவிருக்கும் பலமான சண்டை
கேப்டன் ஷீப்பை தட்டிபறிப்பதற்காக மாயா- விஷ்ணு இருவரும் தீவிரமாக வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
பிக்பாஸ் 7
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
மாஸ்டர் பிளான் போடும் மாயா
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனன்யா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அதிகமான மன அழுத்தம் காரணமாக பவா செல்லத்துரையும் வெளியேறியுள்ளார். தற்போது பிக்பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்கள் இருந்து வருகிறார்கள்.
அதில் பிக்பாஸ் வீட்டிலுள்ளவர்களுக்கு அடுத்த வாரம் கேப்டன் ஷீப் பெறக்கூடாது என்பதற்காக மாயாவும் விஷ்ணுவும் இறங்கி வேலை பார்த்து வருகின்றார்கள்.
அதற்காக மாயா என்ன செய்தாலும் அதற்கு விஷ்ணு தலையாட்டி வருகிறார்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |