பிபி ஜோடிகள் நடனத்தால் கலைந்து போன கரு! சுஜா வருணிக்கு அரங்கேறிய துயரம்
பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர் மற்றும் சுஜா ஜோடிகள் முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்ற நிலையில், குறித்த நிகழ்ச்சியினால் தான் இழந்தது என்ன என்பதை சுஜா கூறியுள்ளார்.
பிக்பாஸ் ஜோடிகள்
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி கடந்த வருடத்தில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வருடமும் கோலாகலமாக ஜோடிகள் நிகழ்ச்சி நடந்தது.
இதில் ஆரம்பத்தில் இருந்து நன்றாக நடனம் ஆடி வந்தவர்கள் அமீர்-பாவ்னி மற்றும் சுஜா-சிவகுமார். தற்போது இவர்கள் இருவர் தான் பிக்பாஸ் ஜோடிகள் 2வது சீசனின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
சுஜா வருணி-சிவகுமார்
நிகழ்ச்சியை முடித்த கையோடு சுஜா வருணியும் அவரது கணவர் சிவகுமாரும் ஒரு பேட்டி அளித்துள்ளார்கள். அதில், பேய்-கடவுள் ரவுண்டில் நடனமாடிய சுஜா கீழே விழுந்துவிட்டார், அவர் அறியாமலேயே யூரின் போய்விட்டார்.
பிறகே தான் சுஜா கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. மருத்துவர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறியதும் எனக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. பின் மருத்துவரின் ஆலோசனைப்படி சுஜா நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஒரு சமயத்தில் சுஜாவிற்கு பீலிடிங் ஆக ஆரம்பித்தது, அப்போது மருத்துவரிடம் கேட்டபோது குழந்தை மிஷ்கரேஜ் ஆனது என்றார், மிகவும் மனமுடைந்து விட்டேன் என சிவகுமார் சோகமான விஷயத்தை பேட்டியில் பகிர்ந்துள்ளார்.