Bigg Boss 10: வெளியே போனதும் மக்கள் உன்னை காரி துப்புவாங்க... ஜேசனிடம் கொந்தளித்த தன்யா
Jasan, Danya Fight: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஜேசனுடன், தன்யா பயங்கரமாக சண்டையிட்டு பேசியுள்ள காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் உள்ள நிலையில், இந்த வாரம் தன்யா வீட்டின் தலைவராக இருந்து வருகின்றார்.
10 வாரங்களைக் கடந்து செல்லும் நிலையில், கடந்த வாரம் பிக்பாஸ் குரல் இல்லாமல் நிகழ்ச்சி சென்றுள்ள நிலையில், இந்த வாரம் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டிலிருந்து முத்தழகி, அவினாஷ் இருவர் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் 10 பேர் உள்ளே விளையாடி வருகின்றனர்.
வினோத், அன்சர், தன்யா மூவரைத் தவிர மற்ற ஏழு பேர் நாமினேஷனில் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டின் தலைவர் தன்யாவிற்கும், ஜேசனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த தருணத்தில் தன்யாவிடம் பேசிய போது, அவரை அடிக்க செல்வது போன்று ஜேசன் சென்றுள்ளார். அப்பொழுது பயங்கர கோபமான தன்யா ஜேசனை மரியாதையே இல்லாமல் பேசியுள்ளார்.
சோத்துல விளையாடுறது நீ தாண்டா, சோத்துல விளையாடியவனே போடா... ஏய் கிளம்புடா.... உன்னையெல்லாம் வெளியே போன பின்பு துப்புவாங்க பாரு... அப்போ தெரியும்... கிளம்பு ஏய் கிளம்பு... என்று பயங்கரமாக பேசியுள்ளார்.
பிக்பாஸில் இந்த வாரமும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவார்களா? அவ்வாறு வெளியேற்றும் நபர் யாராக இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |