வரம்பு மீறும் ராபர்ட் மாஸ்டர்! இது பிக்பாஸ் வீடா? சுற்றுலா தளமா? வறுத்தெடுத்த ஜனனி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜனனி ராபர்ட் மாஸ்டரை வறத்தெடுத்துள்ள காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீடா? சுற்றுலா தளமா?
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் 9ம் தேதி 21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த நிலையில் தற்போது 16 போட்டியாளர்கள் உள்ளே விளையாடி வருகின்றனர்.
நேற்றைய தினத்தில் தலைவர் பதவிக்கான போட்டியில் விக்ரமன், ரச்சிதா, அமுதவானன், மணி என நான்கு பேர் கலந்து கொண்ட நிலையில், இதில் இந்த வாரமும் மணி பிக்பாஸ் தலைவராகி உள்ளார்.
இந்நிலையில் இன்று லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கினை பிக்பாஸ் கொடுத்துள்ளார். தலைப்பே சண்டையை ஆரம்பிக்கிற அளவிற்கு இருக்கின்றது. ஆம் டாஸ்கின் தலைப்பு பிபி ரோஸ்ட்.
இதில் ஜனனி ராபர்ட் மாஸ்டர் இடையே போட்டி நடைபெறுகின்றது. ராபர்ட் மாஸ்டரிடம் ஜனனி அனைவரைம் டார்லிங், டார்லிங் என்று சுற்றுகிறீர்கள், பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளீர்களா? அல்லது சுற்றுலா தளத்திற்கு வந்துள்ளீர்களா? என்று காரசாரமாக கேள்வி எழுப்பினார்.