லியோ படத்திற்கு பின்பு ஜனனி பட்ட கஷ்டம்.... வெளிப்படையாக கூறிய உண்மை
பிக் பாஸில் பிரபலமான ஜனனி லியோ படத்தில் நடித்த பின்பு தனக்கு ஏற்பட்ட கஷ்டத்தினை தற்போது பகிர்ந்துள்ளார்.
பிக் பாஸ் ஜனனி
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் இலங்கை பெண் ஜனனி. லாஸ்லியாவிற்கு அடுத்ததாக இவருக்கும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தார்.
பிக் பாஸில் நாட்கள் செல்ல செல்ல ஜனனி எதற்கெடுத்தாலும் அழுது கொண்டும் சண்டை போட்டுக் கொண்டு இருந்ததும் அவருக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் வர தொடங்கிய நிலையில், அவர் நிகழ்ச்சியிலிருந்தும் எவிக்ட் ஆகினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு ஜனனிக்கு நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
மிகப்பெரிய வாய்ப்பு இந்த வாய்ப்பை தொடர்ந்து இப்போது கதாநாயகி ஆகவும் சில திரைப்படங்களில் ஜனனி நடித்துக் கொண்டிருக்கிறார்.
வீடு கிடைக்காமல் பட்ட கஷ்டம்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு ஜனனிக்கு வீடு கிடைக்காமல் கஷ்டப்பட்டுள்ளார். இதனால் லாட்ஜில் தங்கியிருந்த அவர், ஒரு கட்டத்தில் இலங்கைக்கு கிளம்ப முடிவு செய்துள்ளார்.
பின்பு லியோ படத்தில் படவாய்ப்பு கிடைத்த நிலையில், காஷ்மீருக்கு சென்று சில நாள் இருந்து படப்பிடிப்பை முடித்துள்ளார். பின்பு சென்னை வந்த அவருக்கு மீண்டும் வீடு பிரச்சனை இருந்துள்ளது.
தற்போது தன்னை பார்க்கும் நபர்கள், பிக் பாஸ் ஜனனி தானே என்றும் லியோ படத்தில் நடித்துள்ளீர்கள் தானே என்றும் கேட்டு வருகின்றனர். இது எனக்கு அடையாளமாக உருவாகி உள்ளது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார்.
வீடு கிடைக்காமல் ரொம்ப நாள் கஷ்டப்பட்ட ஜனனிக்கு, தற்போது அவரது விருப்பத்தின் படியே வீடு ஒன்று கிடைத்துள்ளதாகவும், சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருவதாகவும், தமிழ் மக்களின் பாசத்திற்கும், வரவேற்பிற்கும் நன்றி என்றும் எமோஷனலாக பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |