பல லட்ச கடனால் இருக்க வீடு இல்லை! பிக் பாஸ் ஜாக்குலின் ஓபன் டாக்
தமிழில், செலிப்ரிட்டி தொகுப்பாளராகவும் பிக்பாஸ் பிரபலமாகவும் நமக்கு தெரிந்த ஜாக்குலின் தற்போது பல விடயங்களை மிக ஓபனாக பேசி உள்ளார்.

பிக் பாஸ் ஜாக்குலின்
தமிழ் சின்னத்திரையுலகில், முக்கிய தொகுப்பாளராகவும் சில திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.
இவரை படங்களை விட பிக் பாஸ் மூலம் அறிந்த மக்கள் தான் அதிகம்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனக்கு இருந்த கடன் பிரச்சனைகள் குறித்தும் சமீபத்தில் ஒரு நேர்காணலில் ஓபனாக பேசி இருக்கிறார்.

ஜாக்குலின் ஓபன் டாக்
பேட்டியில் ஜாக்குலின் பேசும் போது “என்னால என்னோட வாடகை கூட கட்ட முடியாத நாட்களெல்லாம் இருந்திருக்கு. அப்படிலாம் இருந்திருக்கேன். ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன்.
பினான்சியல் ஸ்ட்ரெஸ் ரொம்ப பெரிய விஷயம். என் வீட்டுல வாங்க மாட்டேன் எங்க அம்மா கிட்ட வாங்க மாட்டேன். எங்க அம்மா கிட்ட வாங்குற அளவுக்குமே பயங்கரமா அப்படி ஒன்னும் கிடையாது.
ஆனா, அட்லீஸ்ட் கேட்டா ஓரளவுக்காவது கொடுப்பாங்க. எங்க அம்மாவோட நகையெல்லாம் வச்சுதான் பிக் பாஸ்க்குள்ள போகும்போது டிரஸ் எல்லாம் ஓரளவுக்கு அரேஞ்ச் பண்ணிட்டு போனேன்.

இதுல வேற ‘பிஆர் (PR) வச்சிருக்கீங்க’ டேய்! வெளில வந்ததுக்கு அப்புறம் காசு ஒரு ரூபா கூட நிக்கலடா! எல்லாமே இருந்த கடன், எங்க அம்மா கிட்ட இருந்தது எல்லாத்தையுமே செட்டில் பண்ணிட்டு ஒரு நிம்மதியா லைஃப் ஸ்டார்ட் பண்றதுக்கு அது ஒரு காசா இருந்துச்சு.
ஓகே? அந்த மாதிரி, நான் அது வந்து ரெண்டு வருஷத்துக்கு முன்னாடில இருந்தே சொல்லிட்டு இருந்தேன் எங்க அம்மாட்ட, ‘நான் பிக் பாஸ் போறேன், சம்பாதிக்கிறேன், இருக்குற கடனை எல்லாத்தையும் அடைக்கிறேன்’
அப்படித்தான் நான் யோசிச்சுதான் உள்ளேயே போனேன்” மாகாபா அண்ணா ஒரு வருடத்தில் அனைத்து மாதங்களும் எனக்கு ஒரு இவண்ட் கொடுத்திருவார்.
அந்த மாதத்தை ஓட்டுவதற்கு எனக்கு அந்த பணம்தான் உதவியது.
எல்லாருக்கும் எப்படி இருக்குன்னா, ‘இவங்க இங்க இருக்காங்கப்பா, அங்க இருக்காங்கப்பா, ஈஸியா எல்லாத்தையும் பண்ணிருவாங்கப்பா, அது பண்ணிருவாங்க’ ஒரு ஷோவுக்கு ஒரு டிரஸ் இல்லாம அழுதிருப்பீங்க என்னைக்காவது?
ஒரு தொகுப்பாளரா நம்ம போய் உட்காரும்போது, ஒரு பெரிய கெஸ்ட் வராங்க அப்படின்னும்போது, நம்மளுக்கான அன்னைக்கான பேமெண்ட் வந்து ஒரு பத்தாயிரமோ பதினைந்தாயிரமோ இருக்கும்.
அந்த டிரஸ்ஸோட ரேட்டே ஒரு பத்தாயிரம் ரூபாய் இருக்கும்.

அப்படித்தான் நம்மளால போய், ஏதோ ஒரு டிரஸ் போட்டு போய் உட்கார்ந்து பண்ண முடியாதுல்ல?””நாம் போடும் ஆடையை வைத்துதான் நம்பள ஜட்ஜ் பண்றாங்க.
நான் தொகுத்த முதல் ஷோ, 'கலக்கப்போவது யாரு' ஃபர்ஸ்ட் டே ஷூட். எனக்கு இன்னைக்கு கால் பண்றாங்க, "நாளைக்கு ஷூட் இருக்கு"னு. "டிரஸ் நீங்க எடுத்துட்டு வாங்க"ன்றாங்க.
எங்க போய் எடுத்துட்டு வர்றது? 'பசங்க' படத்தோட ஹீரோ இருப்பார்ல, அவங்களை கல்யாணம் பண்ணாங்களே பிரீத்தி, அவங்களுமே சீரியல் எல்லாம் பண்ணி இருக்காங்க நிறைய.
அவங்க கிட்டதான் ட்ரெஸ் கேட்டு முதல் நாள் அந்த ஷோவை ஆங்கரிங் பண்ணேன். நான் கேட்ட உடனேயே, எதுவும் கேள்வி கேட்காம அவங்க எனக்கு 3 ட்ரெஸ் கொடுத்தாங்க” என்று எமோஷனலாக பேசி உள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |