அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் கடைசி வரை இருந்த இந்த நடிகை யார் தெரியுமா?
நடிகர் அஜித்குமார் தாயார் இறுதி சடங்கில் கடைசிவரை இருந்த ஒரு நடிகை பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

நடிகர் அஜித்குமார்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி சென்னை பாலவாக்கத்தில் உள்ள இல்லத்தி உடல்நல குறைவால் காலமானார்.
வயோதிகம் மற்றும் உடல் நலக்குறைவு தான் மோகினியின் உயிர் பிரிவிற்கு காரணமாக இருந்துள்ளது. தாய் இருந்த நேரத்தில் நடிகர் அஜித் டுபாயில் இருந்துள்ளார்.

இதன் பின்னர் நேற்று சென்னையை வந்தடைந்தார். நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணிக்கு 89 வயதாகும். மோகினியின் இறுதிச்சடங்கு சென்னை பாலவாக்கம் இல்லத்தில் (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது.
இந்நிலையில், நடிகர் அஜித் தனது தாயின் உடலை இறுதி சடங்கிற்காக தோளில் சுமந்து சென்றார்.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து பெசண்ட் நகர் மின்மயானத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.

கடைசிவரை இருந்த நடிகை யார்?
அஜித்தின் ஜோடியாக 'திலோத்தமா' கேரக்டரில் நடித்தவர் தான் மானு.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மானுவின் தாத்தா கோபிநாத் போர்டோலாய் அம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவராம்.
இதனை மானுவே ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.

காதல் மன்னன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு மானுவுக்கு வந்தது. இதன் பின்னர் சினிமாவை விட்டு விலகி சிங்கப்பூரில் செட்டில் ஆகிவிட்டார்.
மருத்துவர் ஒருவரை திருமணம் செய்துள்ளாராம். தற்போதும் சிங்கப்பூரில் தான் இருக்கிறாராம்.

இந்த நிலையில் அஜித்தின் தாயார் மோகினி மறைவை அறிந்து கணவருடன் சென்னை வந்த மானு அஜித் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி மோகினிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இத்தோடு விட்டு விடாமல் தொடர்ந்து பெசன்ட் நகர் மயானத்தில் மோகினியின் உடல் தகனம் செய்யும் வரை கணவருடன் சென்று அஜித்தின் குடும்பத்திற்கு துணையாக இருந்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |