காலில் விழுந்த பிரியங்கா.... இது உலக மகா நடிப்புடா சாமி! பங்கம் செய்த அண்ணாச்சி
பிக் பாஸ் வீட்டை விட்டு வந்த பிறகு இமான் அண்ணாச்சி பேட்டி ஒன்றில் பேசிய விடயங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதில் அவர் கூறியிருப்பது,
அபிநய், பாவனிக்கு இடையே என்ன நடந்ததுன்னு எனக்கே தெரியாது? எல்லாரும் அங்க குரூப் குரூப்பா உட்கார்ந்து பேசுவாங்க. எந்த வாரம் எபிசோடு எனக்கு தெரியல? ஒருமுறை அபிநய் லெட்டர் எழுதி பாவனிக்கு கொடுத்தார்.
ஆனால், என்ன எழுதிக் கொடுத்தார்? அந்த பொண்ணு எப்படி எடுத்து கொடுத்தார்? என்று யாருக்கும் தெரியாது. நான் ரெண்டு பேரையும் கூப்பிட்டு இந்த விஷயத்தை இத்தோட விட்டுடுங்க, அவங்க வேலைய பாருங்க.
எல்லோருக்கும் குடும்பம் இருக்கிறது. அதை பார்த்து விளையாடுங்கள் என்று சொன்னேன். பிறகு சரி என்று நினைத்தேன்.
பார்த்தால் இவ்ளோ பெரிய பிரச்சனையை கொண்டு வந்து இருக்கிறார்கள். அதேபோல் நான் வெளியே போகும்போது பிரியங்கா காலில் எல்லாம் விழுந்தார்.
இது மிகப்பெரிய உலக மகா நடிப்புடா என்று நினைத்தேன். அப்புறம் அவள் நான் ஏதாவது நினைத்தேன்.
மனதில் வைக்காதீர்கள் என்று சொன்னார். நானும் எல்லாம் ஜாலி தான் என்று சொல்லிட்டு வந்துட்டேன் என்று கூறியுள்ளார்.