இது வீடா இல்ல மாளிகையா? பிக்பாஸ் 9 வீட்டை பார்த்து மெர்சலான விஜய் சேதுபதி
நாளைய தினம் மிக பிரமாண்டமாக ஆரம்பமாகவிருக்கும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பபட்டு வருகிறது.
தமிழில் கடந்த எட்டு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஒன்பதாவது சீசனை ஆரம்பிக்கவுள்ளது. எந்தவித தொலை தொடர்பு வசதிகளும் இல்லாமல் சுமாராக 100 நாட்கள் கடந்து ஒரு வீட்டில் தன்னுடைய தனி திறமையை காட்டி விளையாட வேண்டும்.
இதுவரையில் தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், இடையில் சிம்பு தொகுத்து வந்தார். இதனை தொடர்ந்து கடந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.
மலையாளத்தில் மோகன்லால், இந்தியில் சல்மான்கான், கன்னடத்தில் கிச்சா சுதீப், தெலுங்கில் நாகர்ஜூனா ஆகியோர் தொகுத்து வழங்குகின்றன.
வீடு எப்படி இருக்கு?
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நாளைய தினம் மிக பிரமாண்டமாக ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி பிக்பாஸ் வீட்டை நேரில் சென்று பார்த்து விட்டு மெய் மறந்து போயுள்ளார். அச்சு அசல் பிரபல ஹோட்டல்களில் இருக்கும் வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெட்ரூமிற்கு அருகில் ஜக்குஸி அமைக்கப்பட்டுள்ளது. அதனை வைத்து பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு என்ன டாஸ்க் கொடுக்கப்போகிறார்கள் என்பதை காண சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இதன்போது எடுக்கப்பட்ட காணொளிகள் வெளியாகி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. கார்டன் ஏரியா, உடற்பயிற்சி செய்வதற்கான இடம், உடல் உழைப்பு தொடர்பான போட்டிகளுக்கான இடம் என அனைத்திற்கு தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
#BiggBossTamil #BiggBoss #BiggBossTamil9 #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBoss9 #BB9 #BBT #VijayTV #VijayTelevision pic.twitter.com/bkZ8DduGb8
— Super Deluxze (@super_deluxze) October 4, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |