விருந்தாளியாக வந்த நபர் கொளுத்தி போட்ட சம்பவம்! பணத்தை நினைத்து புலம்பும் போட்டியாளர்
பிக் பாஸ் வீட்டிற்குள் சின்ன மருமகள் என்ற புதிய சீரியலில் நடிக்கும் நடிகை, நடிகர்கள் உள்ளே எண்ட்ரி கொடுத்துள்ளனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 91 நாட்களை கடந்து செல்கின்றது.
இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம், ரவீனா, நிக்ஷன் என 16 பேர் வெளியேறியுள்ளனர்.
தற்போது 91 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பணப்பெட்டியினை பூர்ணிமா எடுத்துச் சென்றுள்ளார். தற்போது பிரபல ரிவியில் ஒளிபரப்பாக இருக்கும் சின்ன மருமகள் சீரியலின் ப்ரொமோ காட்சியினை பிக்பாஸில் வெளியிடுவதற்கு குறித்த சீரியலில் நடித்த நடிகர், நடிகை உள்ளே வந்துள்ளனர்.
உள்ளே வந்த நடிகர் விஷ்ணுவிடம் கொளுத்தி போட்ட நிலையில், விஷ்னு பணப்பெட்டியை எடுத்து கிளம்பி இருப்பேன் என்று சக போட்டியாளரிடம் புலம்பி வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |