Bigg Boss: தெறிக்கவிடும் பிக்பாஸின் கிராண்ட் பினாலே... வெளியே கசிந்த டைட்டில் வின்னர்
பிக் பாஸ் வீட்டில் இறுதியாக 4 போட்டியாளர்கள் இருந்த நிலையில் தற்போது கிராண்ட் ஃபினாலே காணொளியினை பிரபல ரிவி வெளியிடடுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி 20 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸில் பின்பு 4 போட்டியாளர்கள் வைல்டு கார்டு எண்ட்ரி கொடுத்தனர்.
இதில் 20 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் வி்க்ரம், சபரி, அரோரா, திவ்யா என நான்கு பேர் மட்டுமே உள்ளனர். இதில் விக்ரம் நான்காவது இடத்தையும், அரோரா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

மேலும் நேற்று இரவுடன் ஹாட்ஸ்டார் 24 மணி நேர ஒளிபரப்பும் நிறுத்தப்பட்ட நிலையில், இன்று கிராண்ட் பினாலே ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
இதில் விஜய் சேதுபதியின் எண்ட்ரி அட்டகாசமாக இருந்துள்ளது. பின்பு இரண்டாவது ப்ரொமோ காட்சியில் கானா வினோத்தின் பிக்பாஸ் பாடலைக் கேட்டு அரங்கமே ஆர்பறித்துள்ளது.
இறுதி மேடையில் சபரி மற்றும் திவ்யா இருவரும் விஜய் சேதுபதி பக்கத்தில் இருந்துள்ளனர். சபரி விஜய் சேதுபதியின் வலது பக்கத்திலும், திவ்யா வலது பக்கத்திலும் நின்றுள்ளனர்.

கடைசியாக விஜய் சேதுபதி தனது இடதுகையை உயர்த்தி திவ்யாவை வெற்றியாளராக அறிவித்து மாஸ் காட்டியுள்ளார். குறித்த நிகழ்வுகளை நேரில் சென்று பார்த்தவர்கள் ஏற்கனவே கசிய விட்ட நிலையில், பிரபல ரிவியின் சீக்ரெட் உடைந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |