பெண்கள் பின்னாடியே சுற்றும் அசல்! கேள்வி கேட்டு அசிங்கப்படுத்திய ஜிபி முத்து
பெண் போட்டியாளர்களின் பின்னே சுற்றிவரும் அசல் கோளாறை ஜிபி முத்து ட்ரோல் செய்து அடுக்கடுக்காக கேள்வியையும் கேட்டுள்ளார்.
பிக்பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள அசல் கோளார், அதில் உள்ள சக பெண் போட்டியாளர்களிடம் தொடர்ந்து பல்வேறு சில்மிஷ வேலைகளை செய்து வருகிறார்.
முதலில் குவின்ஸியிடம் அவர் அத்துமீறி நடந்து கொண்ட விதத்தை பார்த்து நெட்டிசன்கள் கொந்தளித்த நிலையில், பின்பு மகேஷ்வரி, மைனா நந்தினி, ஜனனி இவர்களிடமும் தனது கைவரிசையைக் காட்டினார்.
இதுமட்டுமின்றி நிவாஷினியை காதலிப்பதாக கூறி வரும் இவரை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றுமாறு ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
இவ்வாறு தொடர்ந்து பல்வேறு வேலைகளை செய்து வந்த அசல் கோளாரு, நேற்று தனலட்சுமியை உருவகேலி செய்து வசமாக மாட்டிக் கொண்டார். இதனால் கொதித்தெழுந்த தனலட்சுமி, அசலை டார் டாராக கிழித்தார். இதைபார்த்த நெட்டிசன்கள் ‘நாங்க செய்ய நினைச்சதை நீ செஞ்சிட்டியே மா’ என தனலட்சுமியை பாராட்டினர்.
ஜிபி முத்து கேட்ட கேள்வி
இந்நிலையில், அசலின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வந்த ஜிபி முத்து, அவரை பங்கமாக கலாய்த்துள்ளார். ஆண் போட்டியாளர்களாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அங்கிருந்து அசல் எழுந்து சென்றதை பார்த்தார் ஜிபி முத்து.
உடனே, “என்ன தம்பி இப்பலாம் உனக்கு ஆம்பளைங்களே புடிக்க மாட்டேங்குதுனு கேட்க, சிரித்தே மழுப்பிக் கொண்டிருந்தார் அசல்.
முன்பெல்லாம் அண்ணன்... அண்ணனு பாசமா வருவீங்க ஏன் இப்படி மாறிட்டீங்க... இதுக்கு காரணம் யாரு என கேட்டு மரண கலாய் கலாய்த்துள்ளார் ஜிபி முத்து.