வெளியே செல்ல கதறும் ஜிபி முத்து! எதிர்பாராத சர்ப்ரைஸ் கொடுத்த பிக்பாஸ்
தீபாவளியை முன்னிட்டு ஜிபி முத்துவுக்கு பிக்பாஸ் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிக்பாஸ்
அண்மையில் துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கொலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவ்வா மற்றும் தனலெட்சுமி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். மைனா நந்தினி வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.
கமலால் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள போட்டியாளர்களில் ஜி.பி. முத்து சோஷியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக உள்ளார். டிக்டாக் மூலம் பிரபலமான இவர் அதன் தடைக்கு பின்னர் யூடியூப் பக்கம் வந்தார்.
சோஷியல் மீடியாவில் இவர் லெட்டர் படிக்கும் வீடியோக்கள் மிக பிரபலம். அதற்கென்றே தனியொரு ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.
தற்போது பிக்பாஸில் தலைவராக இருக்கும் ஜிபி முத்து கடந்த சிலதினங்களாக மிகவும் மன அழுத்தத்தில் இருந்து வருகின்றார். மேலும் பிக்பாஸிடம் தன்னை வீட்டிற்கு அனுப்பிவைக்குமாறு மன்றாடி வருவதுடன், தான் சா்பபிட மாட்டேன் என்று எச்சரிக்கையும் விட்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் கன்டென்ட் கொடுக்கும் போட்டியாளரான ஜிபி முத்துவின் இந்த திடீர் முடிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் பிக்பாஸ் கமல் சார் வரும் வரை உள்ளே இருக்குமாறு கூறியுள்ளார்.
பிக்பாஸ் கொடுக்கும் சர்ப்ரைஸ்
இந்நிலையில் இந்த தீபாவளியையொட்டி பிக்பாஸ் வீட்டிற்கு வந்து அவரது குடும்பத்தினர் ஜிபி முத்துவிற்கு சர்ப்பிரைஸ் தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சீசனில் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற போட்டியாளராக ஜிபி முத்து திகழ்கிறார். அவருக்காகவே நிறைய ரசிகர்கள் இந்த பிக்பாஸ் சீசனை பார்த்து வருகின்றனர்.
இதனால் அவர் நிகழ்ச்சியின் இடையில் வெளியேறுவதை பிரபல ரிவி விரும்பாமல், அவரது குடும்பத்தினர், தம்பிகள், அவருடைய ரசிகர்களையும் இன்று அகம் ரிவி வழியாக பேச வைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். ஏற்கனவே கமல்ஹாசனுக்காக காத்திருக்கும் ரசிகர்கள் இந்த முறை ஜிபி முத்துவின் சர்ப்ரைஸ்காகவும் இன்றைய நிகழ்ச்சியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.