பிக்பாஸிலிருந்து வெளியேறிய ஜிபி முத்து வாங்கிய சம்பளம் எவ்வளவு? வெளியான உண்மை தகவல்
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஜிபி முத்து வாங்கிய சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 9ம் தேதி ஆரம்பமானது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்த போட்டியில் தற்போது 19 போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர்.
அதில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் நம்முடைய ஜி.பி.முத்து. ஒவ்வொரு சீசன் தொடங்கும்போதும் அதில் போட்டியாளராக ஜி.பி.முத்து கலந்துகொள்வார் என செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்து இறுதியில் பொய்யானது.
இந்த சீசனில் முதல் நபராக உள்ளே நுழைந்த ஜிபி முத்து, முதல் நாளிலிருந்தே வேற லெவலில் விளையாடி வந்தார். அதுமட்டுமில்லாம் பிக்பாஸ் வீட்டின் முதல் தலைவராகவும் ஆகியுள்ளார்.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல இரண்டு வாரங்கள் மட்டுமே அவரால் இந்த வீட்டில் இருக்க முடிந்தது. சில தினங்களுக்கு தானாக வெளியேறினார். இதனால் ரசிரக்கள் பேரதிர்ச்சியில் காணப்பட்டனர்.
ஜிபி முத்துவின் சம்பளம்
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இரண்டு வாரங்கள் மட்டுமே இருந்த இவர் எவ்வளவு சம்பளம் பெற்றுக்கொண்டார் என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஜிபி முத்துவிற்கு ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் கூறப்படும் நிலையில் அவர் இருந்த 14 நாட்களுக்கு ரூ.2 லட்சத்து பத்தாயிரம் பெற்றுக் கொண்டுள்ளாராம்.
வெறும் 14 நாட்களில் இவ்வளவு சம்பளம் வாங்கியிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ள நிலையில், இன்னும் உள்ளே இருந்திருந்தால் அவரது கஷடம் விரைவில் தீர்ந்துவிடும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் இவரது யூடியூப் மூலமாக இவருக்கு மாதந்தோறும் ரூ.1 லட்சத்திற்கு மேல் வருமானம் வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.