இது ரொம்ப ஓவரா இருக்கு.. அருணை ஒரு நிமிடம் கதறவிட்ட பிக்பாஸ்- கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்
பிக்பாஸ் கூறிய தகவலை கேட்ட அருண் ஒரு நிமிடத்தில தவித்து போயுள்ளார்.
பிக்பாஸ் 8
பிக்பாஸ் 8, கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி விரைவில் முடிவுக்கு வரப்போகிறது.
75 நாட்களை கடந்து ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் தற்போது ரயான், ராணவ், அருண் பிரசாத், முத்துக்குமரன், விஜே விஷால், தீபக், ஜெஃப்ரி, மஞ்சரி, பவித்ரா, ஜாக்குலின், செளந்தர்யா என மொத்தம் 10 போட்டியாளர்கள் உள்ளனர்.
இறுதிக்கட்டம் நெருங்க நெருங்க போட்டிகள் மற்றும் சண்டைகள் என அதிகமாகிக் கொண்டே வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் நடந்த டாஸ்க்கில் முத்துகுமரன் விட்டுக் கொடுத்து விளையாடிய காரணத்தினால் நாமினேஷன் ப்ரி பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இன்றைய தினம் அன்ஷிதா குறைவான வாக்குகள் பெற்று வெளியேறியுள்ளார்.
தவித்து போன அருண்..
இந்த நிலையில், அருண் பிரசாத்திடம் பிக்பாஸ் விளையாடியது ரசிகர்கள் மத்தியில் பலமாக பேசப்பட்டு வருகின்றது.
அதாவது, பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் அருண் பிரசாத்தை பார்க்க அவரின் அம்மா, அப்பா வந்திருந்தார்கள். அவர்களை அனுப்ப முன்னர் பிக்பாஸ், “ஒரு சில காரணங்களுக்காக உங்களின் வீட்டில் இருந்து வரமுடியவில்லை..” என கூறினார்.
அதை கேட்டு அருண் பிரசாத் பதட்டமாகியுடன் வீட்டில் யாருக்காவது உடம்புக்கு முடியவில்லையோ ஏதாவது பிரச்சனையோ என குழம்பிவிட்டார். அத்துடன் நிறுத்தாமல் அருணைகன்ஃபஷன் அறைக்கு வருமாறு அழைத்தார்.
அப்போது, “பயப்பட வேண்டாம், உங்கள் குடும்பத்தார் வீடியோ காலில் வருகிறார்கள், நீங்கள் கன்ஃபஷன் ரூமுக்கு வாங்க என அழைத்து, “ அங்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக வீடியோ கால் பண்ண முடியவில்லை” என்றும் கூறி அருணை நன்றாக பயம் காட்டி விட்டார்.
இவ்வாறு கூறி விட்டு அப்பா, அம்மாவை பார்த்தவுடன் அருண் கண்கலங்கி விட்டார். இதனை பார்த்த அருணின் ஆதரவாளர்கள், “ இருந்தாலும் இவ்வாறு செய்தது தவறு..” என பிக்பாஸை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |